விஜய் சேதுபதி – தியாகராஜன் குமாரராஜா கூட்டணியில் உருவாகும் ‘பாக்கெட் நாவல்’

இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் புதிய படத்துக்கு பாக்கெட் நாவல் எனப் பெயரிடப்பட்டுள்ளது.சூப்பர் டீலக்ஸ் திரைப்படத்திற்குப் பிறகு மீண்டும் தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கவுள்ளதால், இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இதுமட்டுமின்றி முதல்முறையாக தியாகராஜன் குமாரராஜா படத்துக்கு இளையராஜா இசையமைக்கவுள்ளார்.

தியாகராஜன் குமாரராஜா தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான டைலர் டர்டன் மற்றும் கினோ ஃபிஸ்ட் (TDKF) மூலம் பாக்கெட் நாவல் படத்தை தயாரிக்கிறார். சூப்பர் டீலக்ஸ் படத்தில் பணியாற்றிய படத்தொகுப்பாளர் சத்யராஜ் நடராஜன் இப்படத்திலும் இணைந்துள்ளார்.

இப்படத்தில் விஜய் சேதுபதியுடன் கன்னட நடிகர் ராஜ் பி ஷெட்டி, கிஷோர், மாளவிகா மோகனன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வருகிறது. தமிழ், ஹிந்தி, மலையாளம் உள்ளிட்ட 4 மொழிகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading