விஜய் சேதுபதி நடித்துள்ள ‘ஸ்லம் டாக் – 33 டெம்பிள் ரோடு’ படத்தின் டீஸர் அப்டேட்!

நடிகர் விஜய் சேதுபதி, பிரபல தெலுங்கு இயக்குநர் பூரி ஜெகநாத்துடன் புதிய திரைப்படத்தில் இணைந்துள்ளார். பான் இந்தியா திரைப்படமாக உருவாகவுள்ள ‘ஸ்லம் டாக் – 33 டெம்பிள் ரோடு’ திரைப்படம் மிகப்பெரிய பட்ஜெட்டில் தயாராகி வருவதாக கூறப்படுகிறது. இந்த திரைப்படத்தை பூரி ஜெகநாத் மற்றும் ஜேபி மோஷன் பிக்சர்ஸ் நிறுவனம் இணைந்து தயாரித்து வருகின்றனர்.

நடிகை சார்மி கவுர் தயாரித்து வரும் இந்த திரைப்படத்தில், விஜய் சேதுபதியுடன் இணைந்து தபு, சம்யுக்தா மேனன், துனியா விஜய், நிவேதா தாமஸ் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது.

இந்த நிலையில், விஜய் சேதுபதி நடித்துள்ள ‘ஸ்லம் டாக் – 33 டெம்பிள் ரோடு’ திரைப்படத்தின் டீசர் வருகிற 8-ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாகும் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading