‘துரந்தர்’ படத்தில் அக்ஷய் கன்னா கதாபாத்திரத்தில் நடிகர் நாகார்ஜுனா தான் நடிக்க வேண்டி இருந்தது என்றும், அவர் ‘குபேரா’ மற்றும் ‘கூலி’ படங்களில் நடித்து வந்ததால் இந்த படத்தில் நடிக்க முடியாமல் போய்விட்டது என்றும் கடந்த சில நாட்களாக ஒரு தகவல் பரவியது.ஆனால் சமீபத்தில் இது குறித்து வெளிப்படையாகவே பேசிய நாகார்ஜுனா அந்த தகவலில் எந்த உண்மையையும் இல்லை என்று கூறியுள்ளார். அது மட்டுமல்ல, “இயக்குனர் ஆதித்யா தர் டைரக்சனில் வெளியான ‘உரி’ திரைப்படத்திலிருந்து அவரை நான் ரசித்து வருகிறேன். துரந்தர் படம் உண்மையிலேயே அருமையான படம். இன்னொரு வெற்றி படமாக அமையப்போகும் இதன் இரண்டாம் பாகத்தையும் நான் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்” என்று கூறியுள்ளார்.
Add a Comment
