பிரபல நடிகை ரோஷினிக்கு டூம் டூம் டூம்!

விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘பாரதி கண்ணம்மா’ என்ற தொடரில் நடித்து பிரபலமானவர் ரோஷினி ஹரிப்பிரியன். அதன் பிறகும் சில தொடர்களில் நடித்த ரோஷினி, ‘கருடன்’, ‘மெட்ராஸ் மேட்னி’, ‘தலைவன் தலைவி’ ஆகிய படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்தார்.இந்த நிலையில் ரோஷினி திரைப்பட இசை அமைப்பாளர் சுந்தரமூர்த்தியை திருமணம் செய்து கொண்டார். பொம்மை நாயகி, தண்டட்டி, ஐரா உள்ளிட்ட பல படங்களுக்கு சுந்தரமூர்த்தி இசையமைத்துள்ளார்.பல வருடங்களாக காதலித்து வந்த இவர்கள் இருவரும் தற்போது திருமணம் செய்து கொண்டுள்ளனர். திருமண நிகழ்வில் நெருங்கிய குடும்பத்தினர், நெருங்கிய நண்பர்கள் கலந்துகொண்டனர். திருமணப் புகைப்படங்களை ரோஷினி தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading