மலையாளத்தில் கடந்த வருடம் மோகன்லால் நடிப்பில் ‘தொடரும்’ திரைப்படம் வெளியானது. இயக்குனர் தருண் மூர்த்தி இயக்கிய இந்த படம் கிட்டத்தட்ட 230 கோடிக்கு மேல் வசூலித்து வெற்றி படமாக அமைந்தது. இதனை தொடர்ந்து தற்போது மீண்டும் மோகன்லால் நடிக்கும் புதிய படத்தை இயக்கி வருகிறார் தருண் மூர்த்தி. மோகன்லாலின் 366வது படமாக உருவாகி வரும் இந்த படத்தில் மோகன்லாலுக்கு ஜோடியாக மீரா ஜாஸ்மின் நடிக்கிறார். இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு தளத்திற்கு இயக்குனர் பிரியதர்ஷன் சமீபத்தில் விசிட் அடித்துள்ளார். பிரியதர்ஷன் அடுத்து தான் இயக்க இருக்கும் தனது நூறாவது படத்தில் மோகன்லால் தான் கதாநாயகனாக நடிக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Add a Comment
