இயக்குனர் சேரன் வெளியிட்டுள்ள சமீபத்திய பதிவில், விளம்புநிலை மக்களுக்கான படமாக உருவாக்கப்பட்டிருந்த ‘திருமணம்’ திரைப்படம் தேர்வு குழுவினரால் கண்டு கொள்ளப்படாமல் போனது. அவர்களின் நுண்ணிய பார்வை அற்ற தன்மையை அல்லது தங்களை சார்ந்துள்ளவர்களுக்கு மட்டுமே விருது கொடுக்கும் தன்மையை காட்டுகிறது. அரசிற்கு வரி கட்டி வாக்களித்து நாங்களும் இந்த சமூகத்தில் வாக்காளர்கள் என்ற உரிமையில் எனக்கும் கேட்டும் உரிமை இருக்கிறது. இனி எவருக்கும் இது போல் நடக்க கூடாது நேர்மையான முறையில் பாரபட்சமின்றி யாரும் ஒதுக்கப்படாமல் விருதுகள் சென்றடைய வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். அரசுகள் மாறலாம். அரசின் நிலைப்பாடு என்றும் பாரபட்சமாக இருக்க கூடாது என்பதை வலியுறுத்துகிறேன் என்று தனது ஆதங்கத்தை தெரிவித்துள்ளார்.
Add a Comment
