குடும்ப பாங்கான கதைக்களத்தில் நடிகர் கிஷோர் நடித்துள்ள ‘மெல்லிசை’ திரைப்படம்!

‘வெப்பம் குளிர் மழை’ திரைப்படத்தை தயாரித்த ஹேஷ்டேக் எஃப்டிஎஃப்எஸ் புரொடக் ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள புதிய படம் ‘மெல்லிசை’. அப்பா – மகள் இடையேயான உறவை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இந்த படத்தை இயக்குநர் தீரவ் இயக்கியுள்ளார். இதில் கிஷோர் கதாநாயகனாக நடித்துள்ளார். அவருடன் தனன்யா, சுபத்ரா ராபர்ட், ஜார்ஜ் மரியன், ஹரிஷ் உத்தமன், ஜஸ்வந்த் மணிகண்டன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

உணர்வுபூர்வமான கதையம்சம் கொண்ட இந்த திரைப்படம், தந்தை மற்றும் மகள் இடையேயான பாசம், புரிதல் மற்றும் வாழ்க்கைப் பயணத்தை பிரதிபலிக்கும் வகையில் உருவாகியுள்ளது. இதனிடையே, சில தினங்களுக்கு முன்பு ‘மெல்லிசை’ படத்தின் இரண்டு பாடல்கள் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருந்தது.

இந்த நிலையில், ‘மெல்லிசை’ திரைப்படம் வருகிற 30-ந்தேதி முதல் திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading