விஜய் ஆண்டனி தயாரிப்பில் உருவாகும் ‘பூக்கி’ படத்தின் ப்ரோமோ வீடியோ வெளியீடு!

விஜய் ஆண்டனி தயாரிக்கும் புதிய படம் ‘பூக்கி’. இந்த திரைப்படத்தில் விஜய் ஆண்டனியின் அக்கா மகனும், இதற்கு முன் சில படங்களில் உதவி இயக்குநராக பணியாற்றிய அனுபவம் கொண்டவருமான அஜய் தீஷன் கதாநாயகனாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

‘சலீம்’ திரைப்படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய கணேஷ் சந்திரா, இந்த படத்தின் மூலம் இயக்குநராக அவதாரம் எடுத்துள்ளார். இதில் நடிகை தனுஷா கதாநாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் பாண்டியராஜன், சுனில், இந்துமதி மணிகண்டன், விவேக் பிரசன்னா, பிளாக் பாண்டி, ஆதித்யா கதிர், பிரியங்கா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படம் வருகிற பிப்ரவரி 13ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

2கே தலைமுறை காதலர்களின் உறவுச் சிக்கல்களை மையமாக வைத்து, கலகலப்பான நகைச்சுவையும், வேகமான திரைக்கதையும் கலந்து ‘பூக்கி’ திரைப்படம் உருவாகியுள்ளது. சமீபத்தில் இந்த படத்தில் இடம்பெற்ற இரண்டு பாடல்கள் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகின. இந்த சூழலில் ‘பூக்கி’ படத்தின் புதிய புரோமோ வீடியோவை விஜய் ஆண்டனி வெளியிட்டுள்ளார். இந்த புரோமோ வீடியோ இணையத்தில் வெளியாகியதிலிருந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து, நல்ல வரவேற்பை பெற்று வருகிறது

Add a Comment

Leave a Reply