இயக்குநர் நலன் குமாரசாமி இயக்கத்தில், நடிகர் கார்த்தி மற்றும் நடிகை கிர்த்தி ஷெட்டி இணைந்து நடித்துள்ள திரைப்படம் வா வாத்தியார். இப்படம் பல தடவை தள்ளிப்போனது. கடைசியாக கடந்த மாதம் படம் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், சில தவிர்க்க முடியாத காரணங்களால் வா வாத்தியார் திரைப்படம் வெளியாகவில்லை.
இந்த நிலையில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வா வாத்தியார் திரைப்படம் வரும் ஜனவரி 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ஜனநாயகன் திரைப்படம் தணிக்கைச் சிக்கல்களால் நேற்று வெளியாகாமல் தள்ளிப்போன சூழலில், இந்த படம் உட்பட மேலும் நான்கு திரைப்படங்கள் புதிதாக பொங்கல் வெளியீட்டு பட்டியலில் இணைந்துள்ளன. இதனால், இந்த ஆண்டு பொங்கல் திரையரங்குகளில் திரைப்படங்கள் நிரம்பிய பொங்கல் பண்டிகையாக திரைப்பட ரசிகர்களுக்கு அமைய உள்ளது.
