‘பராசக்தி’ படத்தில் யார் யாருக்கு எவ்வளவு சம்பளம்? வெளியான தகவல்!

சுதா கொங்கரா இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள திரைப்படம் ‘பராசக்தி’. இந்த படத்தில் அவருடன் அதர்வா, ஸ்ரீலீலா, ரவி மோகன் உள்ளிட்டோர் பிரதான வேடங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு இசையமைப்பாளராக ஜி.வி.பிரகாஷ் குமார் பணியாற்றியுள்ளார். இந்த திரைப்படம் இந்தி திணிப்பு தொடர்பான கருத்தை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

பொங்கல் பண்டிகை விடுமுறையை முன்னிட்டு, வருகிற ஜனவரி 10-ஆம் தேதி ‘பராசக்தி’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, படத்தைப் பற்றிய பல்வேறு தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், இப்படத்தில் நடித்த நடிகர்கள் பெற்ற சம்பளம் குறித்த விவரங்களும் தற்போது வெளியாகியுள்ளன.

இந்த நிலையில், ‘பராசக்தி’ திரைப்படத்தின் மொத்த தயாரிப்பு பட்ஜெட் சுமார் ரூ.141 கோடி எனவும், இதில் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ரூ.30 கோடி சம்பளமாக வழங்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேபோல், ரவி மோகனுக்கு ரூ.16 கோடி, இயக்குநர் சுதா கொங்கராவுக்கு ரூ.15 கோடி, நடிகர் அதர்வாவுக்கு ரூ.2 கோடி மற்றும் நடிகை ஸ்ரீலீலாவுக்கு ரூ.1 கோடி சம்பளமாக வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading