கோவா கடற்கரையில் தனது பிறந்தநாளை கொண்டாடிய நடிகை ஸ்ரீதேவி அப்பல்லா!

நடிகர் நானி தயாரிப்பில் கடந்த மார்ச் மாதம் வெளியான ‘கோர்ட்’ திரைப்படம் பெரிய வெற்றியை பெற்றது. இந்த படத்தில் பிரியதர்ஷி புலிகொண்டா, ஸ்ரீதேவி அப்பல்லா, ஹர்ஷ் ரோஷன், சாய் குமார், ரோகிணி, சிவாஜி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

இந்த படத்தின் மூலம் கவனம் பெற்ற நடிகை ஸ்ரீதேவி அப்பல்லா, தற்போது தெலுங்கில் தொடர்ந்து படங்களில் நடித்து வருவதுடன், தமிழிலும் இரண்டு படங்களில் ஒப்பந்தமாகி உள்ளார்.

இந்த நிலையில், சமீபத்தில் அவர் கோவா கடற்கரையில் தனது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். அந்த கொண்டாட்டத்தின் புகைப்படங்களை சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ள நிலையில், அவை தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading