தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய், தற்போது எச்.வினோத் இயக்கத்தில் ‘ஜனநாயகன்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் அடுத்த ஆண்டு 2026 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதில் பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, பிரியாமணி, பாபி தியோல், கவுதம் மேனன், நரேன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
அரசியலில் களமிறங்கிய பிறகு தான் நடிக்கும் கடைசி படம் என்று விஜய் கூறியுள்ளதால் ஜனநாயகன்’ படத்தின் மீது ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. குறிப்பாக 2026 ஜனவரி 9ஆம் தேதி இப்படத்தை திரையரங்குகளில் கொண்டாட ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
இதற்கிடையில், இப்படத்திலிருந்து ஏற்கனவே வெளியான “தளபதி கச்சேரி”, “ஒரு பேரே வரலாறு” ஆகிய இரண்டு பாடல்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றன. அந்த வரவேற்பைத் தொடர்ந்து தற்போது மூன்றாவது பாடல் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, ‘ஜனநாயகன்’ படத்தின் மூன்றாவது பாடலான “செல்ல மகளே” நாளை வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த நிலையில், மூன்றாவது பாடலின் புரோமோ வீடியோவையும் படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. மேலும், இந்த முழு பாடல் நாளை மாலை 5.04 மணிக்கு வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பாடலை தளபதி விஜய் தானே பாடியுள்ளார் என்பது ரசிகர்களிடையே கூடுதல் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
