மலையாள சினிமாவில் வளர்ந்து வரும் நடிகை மீனாட்சி உன்னிகிருஷ்ணன், கடந்த ஆண்டு வெளியான “வாழ” படத்தின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். அதனைத் தொடர்ந்து, சமீபத்தில் கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில், மம்முட்டி நடிப்பில் வெளியான “டொமினிக் அண்ட் தி லேடீஸ் பர்ஸ்” படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

தற்போது, “நைட் ரைடர்ஸ்” என்ற ஹாரர்-காமெடி திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை நவுபல் அப்துல்லா இயக்கியுள்ளார், இதன் மூலம் அவர் இயக்குனராக அறிமுகமாகிறார். மீனாட்சி உன்னிகிருஷ்ணனுடன், தமிழில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான “லியோ” படத்தில், விஜய்யின் மகனாக நடித்த மேத்யூ தாமஸ் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
மேலும், அபு சலீம், ரோனி டேவிட் ராஜ், “ஆவேசம்” படத்தில் நடித்த ரோஷன் ஷானவாஸ், ஷரத் சபா, மெரின் பிலிப், சினில் ஜைனுதீன், நவுஷாத் அலி, நசீர் சங்கராந்தி மற்றும் சைத்ரா பிரவீன் ஆகியோரும் இப்படத்தில் நடித்துள்ளனர். இந்நிலையில், “நைட் ரைடர்ஸ்” படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.