Touring Talkies
100% Cinema

Thursday, May 15, 2025

Touring Talkies

விஜய்யின் பிறந்தநாளுக்கு ரசிகர்களுக்கு காத்திருக்கும் மிகப்பெரிய விருந்து… ரீ ரிலீஸாகும் 5 படங்கள்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -
LISTEN TO PLAY AUDIO NEWS ?

நடிகர் விஜய் அவரது 50வது பிறந்தநாள் வரும் ஜூன் 22ம் தேதி கொண்டாடுகிறார்.தான் அரசியலுக்கு வருவதாக அறிவித்ததையடுத்து இதை அவரது ரசிகர்கள் மற்றும் கட்சியினர் அவரின் முதல் பிறந்தநாளாக கொண்டாட ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

இதற்கிடையில் விஜய்யின் தி கோட் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது.இப்படம் செப்டம்பர் 5ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் விஜய் தலைமையில் அரசியல் மாநாடு பிரமாண்டமாக நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு விஜய் நடித்து வெளியான சூப்பர் ஹிட் திரைப்படங்கள் வரும் 21ம் தேதி அன்று ரீ ரிலீஸ் திட்டமிடப்பட்டுள்ளது., 21ம் தேதி அன்று பகவதி, போக்கிரி, துப்பாக்கி, மாஸ்டர், அழகிய தமிழ்மகன் ஆகிய 5 படங்கள் திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது.இந்த செய்தி ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்தாக அமைந்துள்ளது.

- Advertisement -

Read more

Local News