கேரள மாநிலம் வயநாடு பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் நூற்றுக்கணக்கானோர் பலியாகியுள்ளனர். இதையடுத்து, கேரள முதலமைச்சர் நிவாரண நிதிக்கு நடிகர்கள் மற்றும் நடிகைகள் பலர் நிதி வழங்கி வருகிறார்கள்.
நடிகர்கள் விக்ரம், சூர்யா, கார்த்தி, மம்முட்டி, மோகன்லால், சிரஞ்சீவி, துல்கர் சல்மான், ஜெயரம், பகத் பாசில், நடிகைகள் ஜோதிகா, ராஷ்மிகா மந்தனா, நஸ்ரியா உள்ளிட்ட பலர் நிதி வழங்கி இருக்கிறார்கள். இந்த நிலையில், வயநாடு நிலச்சரிவு பாதிப்பு மீட்பு மற்றும் நிவாரண பணிகளுக்காக ரூ.2 கோடி கேரள முதலமைச்சர் பேரிடர் நிவாரண நிதிக்கு நடிகர் பிரபாஸ் வழங்கியுள்ளார்.