இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சூர்யா, அசின், மனோபாலா, சத்யன் உள்ளிட்டோர் நடித்துள்ள கஜினி திரைப்படம், இன்றாக, ஜூன் 7ஆம் தேதி மீண்டும் வெளியிடப்பட்டுள்ளது. கேரளாவின் திருவனந்தபுரத்தில் ரீ ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. சூர்யாவுக்கு கேரளாவிலும் அதிக ரசிகர்கள் இருப்பதால், அங்கு தமிழ்நாட்டைப் போல் கஜினி படத்தை கொண்டாடுகின்றனர். வீடியோக்கள் இணையத்தில் வேகமாக பரவி வருகின்றன. இன்றைய தினம், இந்தியன் படத்தின் முதல் பாகமும் ரீ ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தியன் படம் தமிழில் மிகப்பெரிய வெற்றி பெற்றதுடன், ஹிந்தியிலும் அமீர் கானுடன் ரீமேக் செய்யப்பட்டது.

படத்தின் கிளைமாக்ஸில் சூர்யா, சஞ்சய் ராமசாமி என தெரியாமல் அசின் மரணிக்கும் காட்சி இன்றைக்கும் கண் கலங்க வைக்கிறது. இவர்களின் நடிப்பை ஹாரிஸ் ஜெயராஜின் இசை உயிரோட்டமாக்கியுள்ளது. படத்தின் அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட் ஆனதால், பாடல்களும் படத்தின் வெற்றிக்கு ஒரு காரணமாக மாறியது.



குறும்புக்கார பெண் கதாபாத்திரமான கல்பனாவிற்கு அசின் அச்சு அசலாக பொருத்தினார். காதலுக்காக தன்னை மாற்றிக்கொள்ளும் சஞ்சய் ராமசாமி கதாபாத்திரத்தில் சூர்யா ரசிகர்களின் மனதை வென்றார் இதனால், இவர்களின் காதல் கதை இன்றும் தமிழ் சினிமாவில் பிரபலமான காதல் கதையாக உள்ளது. மேலும், இரண்டு கெட்டப்புகளில் சூர்யா அட்டகாசமாக நடித்தார்.
கஜினி திரைப்படத்தை முதலில் ஏ.ஆர். முருகதாஸ், நடிகர் அஜித் குமாரை வைத்து இயக்க முடிவு செய்திருந்தார். அஜிதும் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டு போட்டோஷூட்டில் கலந்து கொண்டார். ஆனால் சில காரணங்களால், அஜித் இறுதியில் விலகியதால், இந்த படம் சூர்யாவுக்கு மாறியது. இதனால், சூர்யாவின் மார்க்கெட்டையே உயர்த்தியது. முதலில் இந்த படத்திற்கு “மிரட்டல்” என பெயர் வைக்கப்பட்டிருந்தது என இணையத்தில் உலா வருகிறது.