Tuesday, October 1, 2024

ராமாயணம் படத்தில் பரசுராமராக நடிக்கிறாரா பிரபாஸ்? கசிந்த தகவல்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நிதிஷ் திவாரி இயக்கத்தில் ராமாயண கதையை மையமாகக் கொண்டு உருவாகும் புதிய படத்தில் ராமராக ரன்பீர் கபூர், சீதையாக சாய் பல்லவி நடிக்கின்றனர். கன்னட நடிகர் யாஷ் இப்படத்தில் ராவணனாக நடிக்கிறார். ஏ.ஆர். ரகுமான் இப்படத்திற்குப் பின்னணி இசையமைக்கின்றார்.

இந்தப் படத்தில் அனுமனாக சன்னி தியோல், கும்பகர்ணனாக பாபிதியோல் நடித்துள்ளனர். ராமாயணம் மூன்று பாகங்களாக தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் பான் இந்தியா திரைப்படமாக உருவாகிறது. சமீபத்தில் இப்படத்தின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியானதும், அவை வைரலானது. இப்படம் சுமார் ரூ.835 கோடியில் உருவாகி, 2025 அக்டோபரில் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதுமட்டுமின்றி, ‘ஆதிபுருஷ்’ படத்தில் ராமராக நடித்த பிரபாஸ், நிதிஷ் திவாரியின் ‘ராமாயணம்’ படத்தில் பரசுராமராக நடிக்க உள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. பரசுராம அவதாரம் ராமர் கதாபாத்திரத்திற்கு முன்னோடி மற்றும் முக்கியமானது என்பதால், இந்த அவதாரத்திற்கு பிரபாஸை தேர்வு செய்துள்ளனர். பிரபாஸும் இந்த கதாபாத்திரம் தனது விருப்பத்திற்கு ஏற்ப இருப்பதால், அதனை ஏற்றுக்கொண்டு நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

- Advertisement -

Read more

Local News