நடிகர் விஷ்ணு விஷால் ‘முண்டாசுபட்டி’ மற்றும் ‘ராட்சசன்’ படங்களின் வெற்றியின் பின்னர், மீண்டும் அதன் இயக்குநர் ராம்குமாருடன் இணைந்துள்ளார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு கொடைக்கானலில் மூன்று ஷெட்யூல்களில் முடிந்திருக்கிறது. விஷ்ணுவின் ஜோடியாக ‘பிரேமலு’ படத்தின் மூலம் புகழ்பெற்ற மமிதா பைஜூ நடிக்கிறார். இந்த ஆண்டில் படம் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையடுத்து, ‘கட்டா குஸ்தி’ இயக்குநர் செல்லா அய்யாவுடன் இணைந்து பணியாற்றுகிறார். இந்தப் படத்தின் கதை விவாதம் தீவிரமாக நடந்து வருகிறது, விரைவில் படப்பிடிப்பு அறிவிக்கப்படும். பின்னர், ‘நெஞ்சுக்கு நீதி’ படத்தை இயக்கும் அருண்ராஜா காமராஜ் படத்தில் விஷ்ணு நடிக்கிறாhttps://x.com/Chrissuccess/status/1548554166829989890?t=dbYyOXG02xWYGsPIJ-4Iqw&s=19ர். இதற்கிடையில், ‘களவு’ படத்தின் மூலம் அறிமுகமான முரளி கார்த்திக் இயக்கும் ‘மோகன் தாஸ்’ படத்தில் நடித்து முடித்துவிட்டார். அதன் வெளியீட்டு தேதி விரைவில் அறிவிக்கப்படும்.
அறிமுக இயக்குநர் டைரக்ஷனில் ‘ஆர்யன்’ படத்திலும் விஷ்ணு நடிக்கிறார். இதன் படப்பிடிப்பும் நடைபெற்று வருகிறது. விஷ்ணுவின் ஜோடியாக ஷ்ரத்தா ஶ்ரீநாத் நடிக்கிறார். இது ஒரு போலீஸ் கதை என்று கூறப்படுகிறது. விஜய் சேதுபதியின் ‘ஜூங்கா’ இயக்குநர் கோகுலின் படத்திலும் விஷ்ணு நடிக்க உள்ளார். கோகுல் தற்போது சிம்புவை வைத்து ‘கொரோனா குமார்’ படத்தை இயக்கி வருகிறார். இதை முடித்த பின், அவர் விஷ்ணுவின் படத்தை இயக்க உள்ளார் என்று கூறப்படுகிறது.
விஷ்ணுவின் சகோதரர் ருத்ராவும் தமிழில் ஹீரோவாக அறிமுகமாகிறார். அவர் நாயகனாக நடிக்கும் ‘ஓஹோ எந்தன் பேபி’ படத்தை விஷ்ணு தயாரித்து வருகிறார். இதில் மிதிலா பலர் நாயகியாக நடிக்கிறார். இதற்கிடையில், ‘ராட்சசன்’ படத்தின் இரண்டாம் பாகத்தையும் தயாரித்து, அதில் நடிக்க விஷ்ணு விஷால் திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.