சினிமாவில் பிஸியாக இருந்தாலும், சோஷியல் மீடியா மூலம் ரசிகர்களுக்கு அட்வைஸ் செய்வதில் செல்வராகவன் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். சமீபத்தில், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்து கொண்ட அவர், “நமது மனதை சுடுகாடாக மாற்றி, சந்தோஷத்தை பறிப்பது எதனால் என்று நாம் நினைத்துக்கொண்டிருக்கிறோம்.
நாம் கடந்த காலத்தை பற்றி யோசிப்பதை நிறுத்தினால், நமது மனசாட்சி அமைதியாகிவிடும். நான் கடந்த காலத்தை பற்றி சொல்வது, நமது வாழ்க்கையின் பெரும்பாலான நேரத்தில் அதை பற்றியே யோசிக்கிறோம் என்பதற்காகத்தான். அந்த நிகழ்வுகளை நினைவில் கொள்வது, நிகழ்காலத்தில் பெரிய விஷயமாக தெரியுமென்று தோன்றுகிறது. இது தான் கடந்த காலத்தை பற்றி யோசிப்பதில் இருக்கும் பிரச்சனை.இதிலிருந்து வெளியே வருவதற்காக, நான் ஒரு டெக்னிக்கைக் கூறுகிறேன்.
Video Link: https://www.instagram.com/reel/C8B4KRfph8q/?igsh=MTdleTJ3OGxqeGJqZg==
எப்போதெல்லாம் உங்களுக்கு கடந்த கால நினைவுகள் தலைதூக்கினாலோ, ‘இப்போது, இப்போது’ என்ற எண்ணத்தை ஆழமாக நினைத்துக்கொள்ளுங்கள். இது உங்கள் கவனத்தை நிகழ்காலத்தில் நடப்பதை நோக்கி செலுத்த வைக்கும். இதுவே உங்களை நிகழ்காலத்துக்கு அழைத்து வரும். ஆரம்பத்தில் இது கொஞ்சம் கடினமாக இருக்கலாம். ஆனால் கொஞ்சம் பழகிய பிறகு கைவசப்படுவீர்கள். தொடர்ந்து இதை செய்வதன் மூலம், உங்களுக்கு ஒரு நிம்மதியான வாழ்க்கை கிடைக்கும்” என்று குறிப்பிட்டுள்ளார்.