கவின் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘பிளடி பெக்கர்’. இந்த படத்தை இயக்குனர் நெல்சன் திலீப் குமார் தயாரித்துள்ளார், மேலும் இது அறிமுக இயக்குனரான சிவபாலன் முத்துகுமார் இயக்கிய படமாகும்.

இப்படத்தின் முதல் பாடல் குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி, ‘நான் யார்’?? எனப்படும் இப்படத்தின் முதல் பாடல் நாளை மறுநாள் மாலை 6 மணிக்கு வெளியாகும் என்று படக்குழு வெளியிட்டுள்ள வீடியோ மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த படம் அடுத்த மாதம் 31-ஆம் தேதி, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. தீபாவளியன்று பல முன்னணி நடிகர்களின் படங்கள் வெளியிடப்படும் நிலையில், அதில் ஜெயம் ரவி நடித்துள்ள ‘பிரதர்’, சிவகார்த்திகேயனின் ‘அமரன்’, துல்கர் சல்மான் நடித்துள்ள ‘லக்கி பாஸ்கர்’ போன்ற படங்களும் உள்ளன. இதனால், இந்த தீபாவளி சினிமா ரசிகர்களுக்கு ஒரு சிறந்த விருந்தாக இருக்கும்.
