Tuesday, October 1, 2024

நான் வித்தியாசமான சவாலான கதாபாத்திரத்தில் நடிக்கிறேன்… சர்தார் 2 குறித்து பகிர்ந்த மாளவிகா மோகனன்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

மலையாள திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை மாளவிகா மோகனன். தமிழில் ‘பேட்ட’, ‘மாஸ்டர்’, ‘மாறன்’ போன்ற படங்களில் முன்னணி நடிகர்களுடன் நடித்த இவர், தமிழ் ரசிகர்களிடத்தில் பிரபலமானார். சமீபத்தில் விக்ரம் நடிப்பில் வெளியான ‘தங்கலான்’ படத்தில் மாளவிகா சிறந்த நடிப்பை வெளிப்படுத்தினார்.

இதனிடையே, சமீபத்தில் நடிகை மாளவிகா மோகனன் ‘எக்ஸ்’ தளத்தில் ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது, ஒரு ரசிகர் “உங்களை ஒரு ஹாரர் படத்தில் பேயாக பார்க்க முடியுமா?” என்று கேட்டார். அதற்கு, “என்னை ஏன் பேயாக பார்க்க விரும்புகிறீர்கள்?” என்றார் மாளவிகா.

மற்றொரு ரசிகர், “உங்களுக்கு பிடித்த விக்ரம் படம் எது?” என்று கேட்டபோது, “அவரின் பல படங்கள் எனக்கு பிடிக்கும், ஆனால் ‘பொன்னியின் செல்வன் 2’ எனக்கு மிகவும் பிடிக்கும்” என்று கூறினார். அடுத்த தமிழ் படம் என்ன?” என்ற கேள்விக்கு, “சர்தார் 2. இதில் நான் வித்தியாசமான சவாலான கதாபாத்திரத்தில் நடிக்கிறேன்” என்றார். தொடர்ந்து பல ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த மாளவிகா மோகனனிடம், ஐஸ்வர்யா ராய் பற்றி கேட்டபோது, “நான் அவரின் மிகப்பெரிய ரசிகை” என்று பதிலளித்தார்.

- Advertisement -

Read more

Local News