ஆதி ஆறுமுகம் இயக்கத்தில் புதுமுக நடிகர்கள் வடிவுக்கரசி, இமான் அண்ணாச்சி, கஞ்சா கருப்பு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள “பனை” படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை பிரசாந்த் ஸ்டுடியோவில் நடைபெற்றது. அதில், பல நடிகர்கள் மற்றும் நடிகைகள் கலந்து கொண்டனர். வைரமுத்து இப்படத்திற்கான பாடல்களை எழுதியுள்ளார்.
இந்த விழாவில் பேசிய வைரமுத்து தமிழ் திரைப்படங்களில் வரும் பெயர்களைப் பார்க்கும்போது துக்கமும் வெட்கமும் கொள்வதாக கூறினார். தமிழில் சொற்களுக்கா பஞ்சம், தமிழில் தலைப்புகளுக்காக பஞ்சம், தமிழில் சொல்லாடல்களுக்காக பஞ்சம், நல்ல பெயர்களை தனித்துவமான பெயர் ஏன் நீங்கள் சூடக்கூடாது என்று பார்க்கிறேன் என்றார்.
பத்திரிக்கைகளில் வெளியாகும் அதிகாலை செய்திகளில் படத்தின் தலைப்பைப் பார்த்தவுடன், அடுத்த பக்கத்திற்கு செல்வதற்குள் என் மூளையில் ஒரு மின்னலைப்போல் ஒரு நொடியில் தலைப்பு குறித்த எண்ணங்கள் தோன்றி மறைந்துவிடுகின்றன.தலைப்பு என்றால் நெஞ்சில் தைக்க வேண்டாமா? என் இதயத்தில் பசைபோட்டு ஒட்டிக்கொள்ள வேண்டாமா… நா திருப்பி உச்சரிக்க வேண்டாமா, தலைப்பு என்பது படத்தின் கருத்தை சுருக்கமாக வெளிப்படுத்தும் முக்கிய கூறு. அது நம் ஆர்வத்தை தூண்டி, காட்சிகளை விரிவாக்கும். இதனால்தான் நம் முன்னோர்கள் தமிழில் சிறப்பான தலைப்புகளை உருவாக்கினர்.
தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குநர்களே, தமிழ் படங்களுக்கு அழகான தமிழ் பெயர்களைத் தேர்ந்தெடுக்கும்படி உங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். இது ஒரு கவிஞன் அல்லது பாடலாசிரியரின் வேண்டுகோள் அல்ல – இது தமிழ் மக்களின் பொதுவான ஆசை. தமிழ் மொழிக்கும் பண்பாட்டிற்கும் மரியாதை கொடுக்கும் வகையில் அழகான பெயர்களைத் தேர்ந்தெடுக்கவும் என்று பேசியுள்ளார்.