Touring Talkies
100% Cinema

Thursday, May 15, 2025

Touring Talkies

சிவகார்த்திகேயனுக்கு வில்லனான வித்யூத் ஜம்வால்… வெளியான SKxARM அப்டேட் வீடியோ!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக விளங்கும் சிவகார்த்திகேயன் ‘மெரினா’ படத்தின் மூலம் அறிமுகமானார். தொடர்ந்து பல வெற்றிப் படங்களை கொடுத்து முன்னணி கதாநாயகனாக உயர்ந்துள்ளார். அயலான் வெற்றியைத் தொடர்ந்து, சிவகார்த்திகேயன் ‘அமரன்’ படத்தில் நடித்து முடித்துள்ளார், மேலும் இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் SK23 படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தின் சண்டைக்காட்சிகள் சென்னையில் படமாக்கப்பட்டு வருகின்றன. சமீபத்தில் இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக சஞ்சய் தத் நடிப்பதாக தகவல் வெளியானது. இதனிடையே, வித்யூத் ஜம்வால் இப்படத்தில் வில்லனாக நடிக்க இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.

இதற்கான வீடியோ ஒன்று வெளியிடப்பட்டது, இது இணையத்தில் வைரலாகி வருகிறது. வித்யூத் ஜம்வால் வீடியோவில் மாஸாக நடந்து, கேமராவை பார்த்து சுடுவது போல் செய்கை செய்கிறார். இந்த வீடியோவில் அனிருத்தின் பின்னணி இசை மாஸாக அமைந்துள்ளது. SK23 திரைப்படத்தை இயக்கி முடித்த பின்னர், ஏ.ஆர். முருகதாஸ் பாலிவுட்டுக்கு சென்று சல்மான் கானை வைத்து ‘சிக்கந்தர்’ என்ற திரைப்படத்தை இயக்க உள்ளார். இதில் ராஷ்மிகா மந்தனா, கரீனா கபூர் ஆகியோர் ஹீரோயின்களாக நடிக்க, சத்யராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்.

- Advertisement -

Read more

Local News