தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகர்களில் கார்த்தியும் ரவி மோகனும் நீண்ட நாட்களாக மிக நெருங்கிய நண்பர்களாக இருந்துவருகின்றனர். இருவரும் இணைந்து நடித்த ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம் ரசிகர்களிடையே பெரிதும் வரவேற்பைப் பெற்றது.

தற்போது, கார்த்தி தனது ‘வா வாத்தியார்’ பட வெளியீட்டிற்காகவும், ரவி மோகன் ‘ஜீனி’ படத்தின் வெளியீட்டிற்காகவும் எதிர்பார்த்து வருகின்றனர். இந்நிலையில், இருவரும் ஒன்றாக சபரிமலைக்கு பயணம் செய்து சுவாமி தரிசனம் செய்துள்ளனர்.
அந்த தருணங்களைப் பதிவு செய்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் பரவலாக பகிரப்பட்டு வைரலாகி வருகின்றன. தற்போது கார்த்தி ‘சர்தார் 2’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். அதேபோல் ரவி மோகன் ‘காரத்தே பாபு’ மற்றும் பராசக்தி படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.