Touring Talkies
100% Cinema

Wednesday, March 12, 2025

Touring Talkies

சசிகுமார்க்கு ஜோடியாகிறாரா நடிகை சிம்ரன்… கதை என்ன தெரியுமா?

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

இயக்குனர் மற்றும் நடிகர் சசி குமார் தமிழ் சினிமாவின் முக்கியமான நடிகர்களில் ஒருவராக உள்ளார். திரையுலகப் பயணத்தில் ஏற்றத்தாழ்வுகளைச் சந்தித்தவர். அவரது படங்கள் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும், அவரின் அசத்தலான நடிப்பு எப்போதும் பாராட்டை பெறாமல் இருந்ததில்லை. கடந்த ஆண்டில் அவர் நடித்த ‘அயோத்தி’ திரைப்படம் மாபெரும் வெற்றியடைந்தது.

அதன் பின்பு சமீபத்தில் வெளிவந்த ‘கருடன்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். இந்தப் படமும் வெற்றிபெற்றது. இதனால் அவருக்கு பல பட வாய்ப்புகள் வரத்தொடங்கியுள்ளன.

இந்நிலையில், அறிமுக இயக்குனரின் இயக்கத்தில், மில்லியன் டாலர் பிக்சர்ஸ் தயாரிக்கும் குட் நைட் படத்தில் சசி குமார் ஹீரோவாக நடிக்கிறார். இதில் சசி குமாருக்கு ஜோடியாக நடிகை சிம்ரன் நடிக்கவுள்ளார். இந்த திரைப்படம் முழுக்க குடும்பத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது. விரைவில் இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

Read more

Local News