ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில், நடிகர் அஜித் குமார் நடித்துள்ள திரைப்படம் ‘குட் பேட் அக்லி’. இந்த திரைப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். திரிஷா கதாநாயகியாக நடித்துள்ளார்.
மேலும், சுனில், பிரசன்னா, அர்ஜுன் தாஸ், யோகி பாபு, பிரியா வாரியர், சிம்ரன் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படம் நேற்று உலகம் முழுவதும் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுவருகிறது.
இந்த சந்தோஷ நேரத்தில், மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோ, ‘குட் பேட் அக்லி’ திரைப்பட வெளியீட்டைக் கொண்டாடும் விதமாக ரசிகர்களுடன் சேர்ந்து கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன.மலையாளத் திரையுலகில் பிரபலமான ஷைன் டாம் சாக்கோ, தமிழில் ‘பீஸ்ட்’ திரைப்படத்தில் விஜய்யுடன் தீவிரவாதியாக நடித்தவர். மேலும், கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ படத்தில் நடிகராகவும், அரசியல்வாதியாகவும் நடித்துள்ளார். தெலுங்கில் வெளியான ‘தசரா’ படத்தில் வில்லனாக நடித்தும் பெரும் புகழ் பெற்றுள்ளார்.