Tuesday, November 19, 2024

கீர்த்தி ஷெட்டி மற்றும் ஸ்ரீலீலாவுக்கே டஃப் கொடுக்கும் டோலிவுட் நடிகை… யார் தெரியுமா?

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

ரவி தேஜா மற்றும் ஹரிஷ் ஷங்கர் கூட்டணியில் உருவாகியுள்ள படம் ‘மிஸ்டர் பச்சன்’. இப்படத்தில் பாக்யஸ்ரீ போர்ஸ் கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படத்தின் முதல் பாடல் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. இதில் பாக்யஸ்ரீ போர்ஸ் கவர்ச்சியாக நடனமாடி ரசிகர்களை கவர்ந்திருந்தார்.

இப்படம் அடுத்த மாதம் 15ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. ‘மிஸ்டர் பச்சன்’ ரிலீஸுக்கு முன்பே, பாக்யஸ்ரீ போர்ஸ் சில பெரிய படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். அதன்படி, விஜய் தேவரகொண்டாவின் 12வது படத்தில் இவர் கதாநாயகியாக நடிக்கிறார். இது இவரது இரண்டாவது தெலுங்கு படமாகும்.

மேலும், சுஜீத்தின் இயக்கத்தில் நானியின் படத்திலும் இவர் ஹீரோயினாக இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. இவ்வாறு பாக்யஸ்ரீ போர்ஸ் அடுத்தடுத்து படங்களில் நடித்து, கீர்த்தி ஷெட்டி, ஸ்ரீலீலாவை தொடர்ந்து தெலுங்கு சினிமாவில் கலக்கி வருகிறார். இந்த படங்கள் வெற்றி பெற்றால், பாக்யஸ்ரீ போர்ஸ் எந்த நேரத்திலும் டாப் ஹீரோயினாகி விடுவார். அதிர்ஷ்டம் அவருக்கு சாதகமாக இருந்தால், ஸ்ரீலீலாவும் கீர்த்தி ஷெட்டியும் முன்பு போல் பிஸியாக இல்லாததால், பாக்யஸ்ரீ விரைவில் டோலிவுட்டில் அடுத்த பெரிய நடிகையாக மாறுவார் என பேசப்படுகிறது.

- Advertisement -

Read more

Local News