கார்த்தி நடிப்பில் உருவாகி வரும் “மெய்யழகன்” திரைப்படம் வரும் செப்டம்பர் 27-ஆம் தேதி திரைக்கு வர உள்ளது. இதனுடன், இயக்குநர் பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் “சர்தார் 2” படத்திலும் கார்த்தி நடித்து வருகிறார். இதற்கிடையில், கார்த்தி “சூது கவ்வும்” மற்றும் “காதலும் கடந்து போகும்” படங்களின் இயக்குநர் நலன் குமாரசாமி இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படமே கார்த்தியின் 26-வது படம் ஆகும்.
இந்த படத்திற்கு ‘வா வாத்தியார்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இதில் கார்த்தி, எம்ஜிஆர் ரசிகனாக நடித்துள்ளார். ஸ்டூடியோ கிரேட் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கின்றார்.
இந்த படத்தில் நடிகை கீர்த்தி ஷெட்டி, கார்த்தியுடன் முதன்முறையாக ஜோடி சேர்ந்துள்ளார். சத்யராஜ் இப்படத்தில் வில்லனாகவும், நடிகர் ராஜ் கிரண் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.படத்தின் பர்ஸ்ட் லுக் ஏற்கனவே வெளியிடப்பட்டு நல்ல வரவேற்பைப் பெற்றது. படப்பிடிப்புகள் தீவிரமாக நடைபெற்று வந்த நிலையில், கார்த்தி தனது பகுதிகளை நிறைவு செய்துவிட்டார். மற்ற நடிகர்களின் பகுதிகள் இன்னும் சில நாட்களில் முடியும் என புதிய தகவல்கள் தெரிவிக்கின்றன.