Monday, September 16, 2024

கல்கி படத்துல கமல்ஹாசன் வெறும் 12 நிமிஷம் தான் நடிச்சிருக்கறாரா? வெளியான சீக்ரெட்…

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -
LISTEN TO PLAY AUDIO NEWS ?

நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ், தீபிகா படுகோனே, அமிதாப்பச்சன் மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘கல்கி 2898 எடி’. இப்படத்தில் சிறப்புத் தோற்றத்தில் கமல்ஹாசன் நடித்துள்ளார். அதாவது, நீட்டிக்கப்பட்ட சிறப்புத் தோற்றம் என்று கூறப்படுகிறது.

கமல்ஹாசன் சம்பந்தப்பட்ட காட்சிகள் இப்படத்தின் கிளைமாக்சுக்கு முன்பாகத்தான் வருமாம்.சுமார் 12 நிமிடங்கள் முதல் 20 நிமிடங்களுக்குள் தான் அவரின் காட்சிகள் இடம்பெறும் என்றும்,‌ அதன் பிறகு இரண்டாவது பாகத்தில் அவருடைய காட்சிகளுக்கு அதிக முக்கியத்துவம் உண்டு என்கிறாது தெலுங்கு சினிமா வட்டாரம்.

முக்கியமாக இப்படத்தில் இடம்பெற்றுள்ள புஜ்ஜி கார்ரை வைத்து இப்படத்தின் ப்ரோமோஷன் நடந்துவருகிறது.ஜுன் 27ம் தேதி வெளியாக உள்ள இப்படத்தின் டிரைலர் வெளியீடு மும்பையில் ஜுன் 10ம் தேதி நடைபெற உள்ளது. இப்படத்தின் முக்கிய நிகழ்வுகளில் கமல்ஹாசன் கலந்து கொள்கிறாராம்.இப்படத்தை அடுத்து கமல்ஹாசன் நடித்துள்ள ‘இந்தியன் 2’ படம் ஜுலை 12ம் தேதி வெளியாக உள்ளது.

- Advertisement -

Read more

Local News