Saturday, September 14, 2024

கடைசிக்கட்ட படப்பிடிப்பை எட்டியுள்ள ஷங்கரின் கேம் சேன்ஜர்… ஆனால்… வெளியான சுவாரஸ்யமான தகவல்! #GameChanger

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தமிழில் சமீபத்தில் வெளியான ‘இந்தியன் 2’ படத்துடன், இயக்குனர் ஷங்கர் தெலுங்கில் ‘கேம் சேஞ்சர்’ படத்தையும் இயக்கி வந்தார். இரண்டு படங்களிலும் மாறி மாறி பணியாற்றி வந்தார். அவர் தெலுங்குப் படம் இயக்கப் போகும் போதெல்லாம் அவருடைய முன்னாள் உதவியாளர்கள், தற்போதைய இயக்குனர்கள் சிலர் ‘இந்தியன் 2’ படத்தை இயக்கியதாக கூறப்படுகிறது.

ஷங்கர் இங்கு வந்தால், அங்கு தெலுங்குப் படத்தை அங்குள்ள அவருடைய உதவியாளர்கள் இயக்கி வந்தார்கள் எனவும் தெலுங்கில் இயக்குனர்களாக இருக்கும் சிலர் ஷங்கருக்காக இரண்டாவது யூனிட் இயக்குனர்களாகப் பணியாற்றி வருகிறார்களாம். தற்போது ‘கேம் சேஞ்சர்’ படத்தின் கடைசி கட்டப் படப்பிடிப்பு இரண்டாவது யூனிட் இயக்குனர் ஒருவர்தான் இயக்கி வருகிறார் என சொல்லப்படுகிறது.

‘கேம் சேஞ்சர்’ படத்தின் மற்ற இறுதிக் கட்டப் பணிகளில் ஷங்கர் ஈடுபட்டுள்ளதால்தான் இப்படியான மாற்றங்களாம். ‘இந்தியன் 2’ படத்தின் ரிசல்ட்டை மறந்துவிட்டு ஷங்கர் ‘கேம் சேஞ்சர்’ படத்தில் தீவிரமாகப் பணியாற்றுவதாக டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

- Advertisement -

Read more

Local News