Touring Talkies
100% Cinema

Saturday, November 8, 2025

Touring Talkies

என் வாழ்க்கைக்கான சரியான நபருக்காக காத்திருக்கிறேன் – நடிகை ஹனிரோஸ் OPEN TALK!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

மலையாள நடிகை ஹனி ரோஸ், 2005ஆம் ஆண்டு 14 வயதில் ‘பாய் பிரண்ட்’ என்ற திரைப்படத்தின் மூலம் மலையாளத் திரைப்பட உலகில் தனது நடிப்புத் துவக்கத்தை கண்டார். தொடர்ந்து பல்வேறு மலையாள திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழில் ‘முதல் கனவே’, ‘சிங்கம்புலி’, ‘மல்லுக்கட்டு’, ‘கந்தர்வன்’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தெலுங்கில் நந்தமுரி பாலகிருஷ்ணாவுடன் ‘வீரசிம்ம ரெட்டி’ படத்தில் நடித்ததன் மூலம் மேலும் பிரபலமடைந்தார்.

நடிகை ஹனி ரோஸுக்கு பெரிய அளவில் சினிமாவில் அங்கீகாரம் கிடைக்காதபோதிலும், எப்போதும் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருப்பதாலும், பல நிகழ்ச்சிகளில் பங்கேற்று கவர்ந்து ரசிகர்கள் மத்தியில் பெரிதும் பிரபலமாக வலம் வருகிறார். பல வணிக நிறுவனங்கள், கடைகள் ஆகியவற்றின் திறப்புவிழாக்களில் பங்கேற்பதற்காக அடிக்கடி அழைக்கப்படுகிறார். தென்னிந்திய சினிமாவின் கவனம் ஈர்க்கும் நடிகையாக உள்ள ஹனி ரோஸ், தன் அணிகலன்கள் மற்றும் உடைதேர்வுகள் காரணமாக சமூக வலைதளங்களில் ரசிகர்களின் வலுவான ஆதரவை பெற்றுள்ளார்.

இந்நிலையில் காதல் குறித்து ஹனி ரோஸ் பேசியுள்ளார், அதுவே சமூக வலைதளங்களில் கவனத்தை ஈர்த்துள்ளது. அவர் கூறியதாவது, “உலகத்தில் உள்ள அழகான விஷயங்களில் மிக உயர்வாகக் கருதப்பட வேண்டியது காதலே. ஒரு மனிதனின் வாழ்க்கை காதல் இல்லாமல் முழுமையடையாது. என்னுள்ளும் காதல் மலர்ந்திருக்கிறது. ஆனால் தற்போது என் வாழ்வில் காதல் இல்லை. எனக்கேற்ற, என் வாழ்க்கைக்கான சரியான நபருக்காக காத்திருக்கிறேன். அவர் இன்னும் என் பார்வையில் விழவில்லை. ஆனால் ஒருநாள் அவர் என் பார்வையில் பட்டுவிட்டால், நிச்சயமாக அவரை கைவிடமாட்டேன் எனக் கூறினார்.

- Advertisement -

Read more

Local News