Touring Talkies
100% Cinema

Wednesday, March 12, 2025

Touring Talkies

எனக்கு பிரபல நடிகை சவுந்தர்யாவாக நடிக்க ஆசை… யார் சொன்னது தெரியுமா?

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

ரஜினியுடன் ‘அருணாச்சலம்’, ‘படையப்பா’, கமலுடன் ‘காதலா காதலா’, அர்ஜுனுடன் ‘மன்னவரு சின்னவரு’. விக்ரமுடன் ‘கண்டேன் சீதையை’, விஜயகாந்துடன் ‘தவசி’, ‘சொக்கத்தங்கம். பார்த்திபனுடன் ‘இவன்’ உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபல நடிகையாக வலம் வந்தவர் சவுந்தர்யா. இந்நிலையில் நடிகை ராஷ்மிகா ஒரு பேட்டியில், குறிப்பிட்ட கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்று எல்லா நடிகைகளுக்கும் ஏக்கம் இருக்கும். எனக்கும் மறைந்த நடிகை சவுந்தர்யாவின் வாழ்க்கையை படமாக எடுத்தால் அதில் சவுந்தர்யாவாக நடிக்க ஆசை இருக்கிறது.அது எனது கனவு. நான் சினிமாவுக்கு வருவதற்கு முன்பே சவுந்தர்யாவின் நடிப்புக்கு தீவிர ரசிகை. அவரது படங்களை ஒன்று விடாமல் பார்த்து விடுவேன். அவரது படங்களை பார்த்து வளர்ந்த நான் இப்படி முன்னணி கதாநாயகியாக உயர்வேன் என்று கனவிலும் நினைக்கவில்லை. எனக்கு சவுந்தர்யா சாயல் இருப்பதாக பலரும் பேசுகிறார்கள். அதனால் சவுந்தர்யாவாக நடிக்க ஆசை அதிகமாகி கொண்டே வருகிறது. வாய்ப்பு வந்தால் நடிக்க தயாராக இருக்கிறேன்” என்றார்.

- Advertisement -

Read more

Local News