Touring Talkies
100% Cinema

Thursday, May 15, 2025

Touring Talkies

எக்ஸ்பிரஸ் வேகத்தில் கவின்… பிளடி பெக்கர் படத்தின் மாஸ் அப்டேட்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

இயக்குனர் நெல்சன் முதல் முறையாக பிலாமென்ட் பிக்சர்ஸ் நிறுவனத்தின் மூலம் தயாரிக்கும் படத்தில் கவின் ஹீரோவாக நடிக்கிறார். இப்படத்திற்கு ‘பிளடி பெக்கர்’ என பெயரிட்டுள்ளனர். இப்படத்தை நெல்சனின் உதவி இயக்குனர் சிவபாலன் இயக்குகிறார். ஜென் மார்ட்டின் இசையமைக்கிறார்.

கதாநாயகியாக அக்ஷயா நடிக்கிறார். ஜெயிலர் தன்ராஜ், அனார்கலி நாசர், ரெட்டின் கிங்ஸ்லி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஏற்கனவே இதன் படப்பிடிப்பு கடைசி கட்டத்தை எட்டியுள்ளது. தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தொடங்கியுள்ளன.

இந்நிலையில் இப்படத்தை ஆகஸ்ட் மாதத்தில் திரைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளனர். இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வருவதாக கூறப்படுகிறது. மேலும், கவின் நடிப்பில் கிஸ் மற்றும் மாஸ்க் ஆகிய இரண்டு படங்களையும் அடுத்தடுத்து விரைவில் திரைக்கு வர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

- Advertisement -

Read more

Local News