நடிகர் கவின் ‘டாடா’, ‘ஸ்டார்’ என அடுத்தடுத்த படங்களில் ஏராளமான ரசிகர்களை கவர்ந்து வெற்றி பட நாயகனாக முன்னேற்றம் காண்கிறார். இந்நிலையில் கவின் 08 படம் செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாக உள்ளதாக கடந்த சில வாரங்களுக்கு முன் கூறப்பட்டது.
தற்போது கிஸ் படத்தில் நடித்துள்ள கவின் இதைதொடர்ந்து மாஸ்க் மற்றும் ப்ளடி பெக்கர் படத்தில் நடித்துவருகிறார்.ப்ளடி பெக்கர் திரைப்படம் படப்பிடிப்பு முடிந்து ரிலீஸ்க்கு தயாராகவுள்ளது. விரைவில் இப்படங்கள் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கவின் 08 படத்தில் கவினுக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில், இந்த படம் கைவிடப்பட்டதாகவும் கூறப்பட்டது. சில சம்பள விவகாரங்களால் இந்த படம் துவங்கப்படாமல் இருந்த நிலையில், தற்போது இந்த பிரச்சனைகள் தீர்க்கப்பட்டு படம் மீண்டும் வேலைகளை துவங்கியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. விரைவில் இந்த படத்தின் ஷூட்டிங் அப்டேட் வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம்.