வெற்றிமாறன் இயக்கத்தில் உருவான “விடுதலை 2” படத்தின் வெளியீட்டு தேதி குறித்து தகவல் வெளியாகியுள்ளது. இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான “விடுதலை” முதல் பாகத்தில் நடிகர் சூரி முக்கிய கதாபாத்திரத்திலும், விஜய் சேதுபதி முக்கியமான மற்றொரு கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இந்தப் படம் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தாலும், வசூல் ரீதியாக வெற்றிபெற்ற படமாகும்.
![](https://touringtalkies.co/wp-content/uploads/2024/08/1000052248-1-656x1024.jpg)
இப்படத்தின் இரண்டாம் பாகத்திற்காக மீதமுள்ள காட்சிகளுக்கான படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இதில், நடிகர்கள் சூரி மற்றும் விஜய் சேதுபதிக்கான காட்சிகள் தற்போது எடுக்கப்பட்டு வருகின்றன. இப்பகுதியில், விஜய் சேதுபதிக்கு மனைவியாக நடிகை மஞ்சு வாரியர் நடிப்பதாகவும், இருவருக்கான காட்சிகள் 1960களில் நடப்பது போன்று காட்சிப்படுத்தப்பட உள்ளதால், இருவரின் தோற்றத்தை இளமையாகக் காட்ட டீஏஜிங் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த, வெற்றிமாறன் முடிவு செய்துள்ளதாகவும் கூறப்பட்டது.
![](https://touringtalkies.co/wp-content/uploads/2024/08/1000052186-1-656x1024.jpg)
மேலும், நடிகர் எஸ்.ஜே.சூர்யா “விடுதலை 2” பாகத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்க உள்ளார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. இந்த நிலையில், “விடுதலை 2” படம் இந்த ஆண்டின் கிறிஸ்துமஸ் வெளியீடாக திரைக்கு வரும் என தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக, தயாரிப்பு நிறுவனம் வெளியீட்டு வேலைகளுக்கான பணிகளில் ஈடுபட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.