இனி 18 வயதுக்கு கீழ் மட்டும் மூன்று வகையான சென்சார் அதாவது 7, 13 மற்றும் 16 வயதுகளுக்கு மேற்பட்டவர்கள் பார்க்கும் படங்களை தனித்தனியாக வகைப்படுத்தி சான்றிதழ்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது,
1) யு/ஏ7+ – 7 வயதுக்கு மேல் மற்றும் பெற்றோர் பரிந்துரையுடன் சிறார்களுக்கானது
2) யு/ஏ13+ – 13 வயதிற்கு மேற்பட்ட இளம் பார்வையாளர்களுக்கானது
3) யு/ஏ16+ – 16 வயதிற்கு மேல் வயதுடையவர்களுக்கு
என்பதை தெளிவாக அறிந்துகொள்ள முடியும். இதற்கு முன், ‘யு’, ‘ஏ’, ‘யு/ஏ’ போன்ற பொதுவான சான்றிதழ்கள் மட்டுமே வழங்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.