நடிகர் அர்ஜுன் தாஸ், அவரது தோழியோடு இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். ‘கைதி’ திரைப்படத்தின் வெற்றிக்குப் பின் நட்சத்திர நடிகரானவர் அர்ஜுன் தாஸ். விஜய்யுடன் ‘மாஸ்டர்’ படத்தில் நடித்து கவனிக்கப்பட்டார். தொடர்ந்து, ‘அநீதி’, ‘ரசவாதி’ உள்ளிட்ட படங்களில் கதாநாயகனாக நடித்து தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்கள் பட்டியலில் இணைந்துள்ளார்.

இந்த நிலையில், அர்ஜுன் தாஸ் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பெண் ஒருவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து அதில் ஏ.ஆர். ரஹ்மான் பாடல் ஒன்றையும் இணைத்து காதல் குறியீட்டுடன் பதிவிட்டுள்ளார்.இதனால், அர்ஜுன் தாஸ் தன் காதலியுடன் இருக்கிறாரா அவரது காதலை அனைவருக்கும் வெளிப்படுத்த அப்படி பதிவிட்டுள்ளாரா இல்லை எதாவது படத்தின் ப்ரோமோஷனா என ரசிகர்கள் ஷாக் ஆகியும் குழம்பியும் கமெண்ட் செய்து வருகின்றனர்.

முன்னதாக, நடிகை ஐஸ்வர்யா லட்சுமி இவருடன் எடுத்த புகைப்படத்துடன் இதயக் குறியீட்டை இணைத்து பதவிட்டிருந்தார். ஆனால், அப்படி எதுவும் இல்லை என ஐஸ்வர்யா லட்சுமி விளக்கமளித்தது குறிப்பிடத்தக்கது.