‘குபேரா’ திரைப்படத்திற்குப் பிறகு தனுஷ், தான் இயக்கி நடித்துள்ள ‘இட்லி கடை’ திரைப்படத்தின் இறுதி கட்ட பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். இதனிடையே, அவர் நடிக்கும் 54வது திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது ஆரம்பமாகியுள்ளது.

‘போர் தொழில்’ திரைப்படத்தை இயக்கிய விக்னேஷ் ராஜா இந்த புதிய படத்தை இயக்குகிறார். இதில் தனுஷுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார்.
தற்போது இந்தப் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில், படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட ஒரு புகைப்படத்தை, இந்தப் படத்தை தயாரிக்கின்ற வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம், தங்களது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அந்த புகைப்படத்தில், ஒரு பழைய எஸ்டிடி பூத்தில், தனுஷ் தொலைபேசியில் பேசிக்கொண்டிருக்கும் காட்சி இடம்பெற்றுள்ளது. இப்புகைப்படம் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.