நடிகை, பாடகி, தயாரிப்பாளர் என பல்வேறு அவதாரங்களில் திகழும் கமல்ஹாசனின் மகள் ஸ்ருதிஹாசன், அடுத்ததாக இயக்குனராக வருகிறார் என எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில், சமூக ஊடகங்களில் ஆக்டிவாக இருக்கும் ஸ்ருதிஹாசன், ரசிகர்களுடன் கலந்துரையாடினார்.
அப்போது, கமல்ஹாசனின் பயோபிக்கையை இயக்குவீர்களா என கேட்டபோது, அவர் பதிலளித்தது: “வாய்ப்பே இல்லை. அப்பாவின் வாழ்க்கையை படமாக எடுக்க நான் சரியான ஆள் இல்லை. நல்ல நல்ல இயக்குனர்கள் இருக்கிறார்கள்; அவர்கள் அப்பாவின் வாழ்க்கையை நல்லபடியாக படமாக எடுப்பார்கள். என் அப்பா அல்டிமேட் என எப்பொழுதும் நினைப்பது உண்டு.
அப்பா ரொம்ப கூல். ஒரு நாள் செட்டுக்கு சென்றபோது அவர் இயக்குனர் சொல்வதை கேட்டுக் கொண்டிருந்தார். என் அப்பா வகுப்பறையில் இருப்பது போன்று கேட்டுக்கொண்டிருந்தார். அதை பார்த்ததும் இயக்குனராக இருப்பது ரொம்ப கூலான வேலை என நினைத்தேன்,” என்றார்.