Touring Talkies
100% Cinema

Thursday, May 15, 2025

Touring Talkies

அனுஷ்காவுக்கு விரைவில் திருமணமா? மாப்பிள்ளை யார் தெரியுமா?

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகை அனுஷ்கா 2005ஆம் ஆண்டு தெலுங்கில் சூப்பர் படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். ஆனால் அவர் வரவேற்பையும் புகழையும் அருந்ததி படத்தில் நடித்ததனால் பெற்றார். அந்த பேய் படத்தில் அவருடைய நடிப்பு மிகுந்த பாராட்டுகளை பெற்றது. ஹீரோவுக்கு இணையாக அவர் பெற்ற வரவேற்பும் குறிப்பிடத்தக்கது. அறிமுகமான சில ஆண்டுகளிலேயே முக்கிய கதாநாயகியாக வலம் வந்ததால், அவருக்கு அதிகமான பாராட்டுகள் கிடைத்தன.

அனுஷ்கா தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் தனித்தனி மேனேஜரை வைத்திருக்கும் அளவுக்கு பிஸியாக இருந்தார். அதன் பிறகு ராஜமௌலியின் இயக்கத்தில் பாகுபலி படத்தில் நடித்தார். பாகுபலி படத்தின் இரு பாகங்களும் இந்திய அளவில் மாபெரும் வெற்றியை பெற்றது.இந்த படத்தில் அனுஷ்காவின் நடிப்பு மிகப்பெரிய பாராட்டு மழையை பொழிய செய்தது.

அனுஷ்கா சினிமாவில் இருந்து சில ஆண்டுகள் விலகியிருந்தார்.பின்னர் நீண்ட நாடுகள் கழித்து அவர் மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி படத்தில் நடித்தார். அந்த படம் கடந்த ஆண்டு வெளியானது.ஜவான் படத்துடன் ஒரே நேரத்தில் வந்ததால், ரசிகர்களால் இவரின் படத்துக்கு எதிர்பார்ப்பு குறைந்தது. ஆனால், அது ஒரு ஃபீல் குட் படமாக அமைந்தது.

இந்நிலையில் 42 வயதான அனுஷ்கா இன்னும் திருமணம் செய்யவில்லை.அவர் பிரபாஸை காதலித்தார் என்ற பேச்சு இருந்தது, ஆனால் அவர் இதுவரை மௌனமாகவே இருந்தார்.தற்போதைய தகவலின்படி, கர்நாடக திரையுலகத்தில் பிரபலமான தயாரிப்பாளருடன் அனுஷ்கா திருமணம் செய்யவிருப்பாதகவும் மேலும் இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

- Advertisement -

Read more

Local News