சூர்யா நடிப்பில் 2012-ம் ஆண்டு வெளியான ‘மாற்றான்’ படத்தை கே.வி. ஆனந்த் இயக்கினார். இதில், சூர்யாவுக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடித்திருந்தார். இப்படம், ஒட்டிப்பிறந்த இரட்டையர்களின் தனித்துவமான கதையால் பெரும் கவனம் பெற்றது.
இப்படம், தெலுங்கில் ‘பிரதர்ஸ்’ என்ற பெயரில் வெளியானது. இதில், சூர்யாவின் ஒரு கதாபாத்திரத்திற்கு கார்த்தி டப்பிங் பேசியுள்ளார் என்பதை நீங்கள் அறிவீர்களா? ஆம், அதில் வரும் அகிலனுக்கு சூர்யாவும், விமலனுக்கு கார்த்தியும் குரல் கொடுத்திருக்கின்றனர்.
நடிகர் சூர்யா, தெலுங்கில் டப்பிங் பேசிய முதல் படம் இதுவாகும். அப்போது, அவர் ‘சிங்கம் 2’ படத்தின் படப்பிடிப்பில் பிஸியாக இருந்ததால், தெலுங்கு பதிப்பிற்கு கார்த்தி டப்பிங் பேசியுள்ளார்.