Touring Talkies
100% Cinema

Thursday, May 15, 2025

Touring Talkies

அடுத்தடுத்தென அசத்தும் கவின்… துவங்கிய மாஸ்க் படப்பிடிப்பு!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

‘ஸ்டார்’ படத்திற்கு பிறகு ‘பிளடி பெக்கர்’ மற்றும் ‘கிஸ்’ ஆகிய இரண்டு படங்களில் கவின் நடித்துள்ளார்.இதில் நெல்சன் தயாரிப்பில் பிளடி பெக்கர் படத்தின் படப்பிடிப்பு முக்கால்வாசி முடிந்துவிட்டதாக கூறப்படுகிறது.இப்படத்தை ஆகஸ்ட் மாதத்தில் திரைக்கு கொண்டுவர திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இப்போது புதுமுக இயக்குனர் விக்ரமனன் அசோகன் இயக்கத்தில், கவின் ‘மாஸ்க்’ படத்தில் நடிக்கிறார். இதில் நாயகியாக ஆண்ட்ரியா நடித்துள்ளார்.இந்த படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார்.

இப்படத்தில் மேலும், ருஹானி சர்மா, பால சரவணன், சார்லி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கடந்த மாதம் இந்த படத்தின் பூஜை நடைபெற்றது. ஜூன் 12ம் தேதி சென்னையில் இதன் படப்பிடிப்பு துவங்கியது.

- Advertisement -

Read more

Local News