Thursday, May 9, 2024

‘அடங்காத அசுரன்’ பாடல் அசுரத்தனமாக இருக்கும் – எஸ்.ஜே.சூர்யா #RAAYAN

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ளது ராயன் திரைப்படம்.இந்த படத்தை அவரே இயக்கி, நடித்துள்ளார்.சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைத்திருக்கிறார்.

இந்த படத்தில் தனுஷுடன் எஸ்.ஜே. சூரியா, செல்வராகவன், சுதீப் கிஷன் பிரகாஷ் ராஜ், துஷாரா விஜயன், அபர்ணா பாலமுரளி, வரலட்சுமி ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படம் கேங்ஸ்டர் கதைக்களத்தில் தான் எடுக்கப்பட்டுள்ளது தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், ராயன் படத்தின் முதல் பாடல்அடங்காத அசுரன் நாளை வெளியாகும் என்று ஏ.ஆர்.ரகுமான் மற்றும் தனுஷ் இந்த பாடல் குறித்த புதிய போஸ்டர் வெளியிட்டு உள்ளனர்.இவர்கள் மட்டுமின்றி எஸ்.ஜே. சூர்யாவும் இந்த போஸ்டரை பகிர்ந்துள்ளார் , “ஏ.ஆர். ரகுமான் இசையில் உருவாகி இருக்கும் அடங்காத அசுரன் பாடல் வேற லெவலாக இருக்கும் இந்த பாடலின் ஹிட்டிற்கு நான் கேரண்டி என்றவாறு பதிவிட்டுள்ளார்.

நடிகர் தனுஷ் மற்றும் ஏ.ஆர். ரகுமான் கூட்டணியில் அடங்காத அசுரன் பாடல் தீயாக இருக்கும், நாளை சந்திக்கிறேன் என்று எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.இதை கண்ட ரசிகர்கள் ஆவலோடு ராயன் படத்தின் முதல் பாடலுக்காக காத்திருக்கின்றனர்.

- Advertisement -

Read more

Local News