Thursday, August 8, 2024

விரைவில் தொடங்குகிறதா ஜெயம்ரவி நடித்த மிருதன் படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு? #MIRUTHAN 2

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

கடைசியாக ஜெயம்ரவி நடித்த சைரன் படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இதனையடுத்து ஜெயம் ரவி நடிப்பில் பிரதர், ஜீனி, காதலிக்க நேரமில்லை போன்ற படங்கள் அடுத்தடுத்து திரைக்கு வர காத்திருக்கின்றன.இதில் பிரதர் திரைப்படம் இந்த வருடம் தீபாவளிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கடந்த 2016ம் ஆண்டு சக்தி சவுந்தரராஜன் இயக்கத்தில் அவர் நடித்த மிருதன் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் இரண்டாம் பாகம் தற்போது தற்போது தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த எட்டு ஆண்டுகளுக்கு முன்பு வெளியான இந்த படத்தில் ஜெயம் ரவியுடன் லட்சுமி மேனன், அனிகா, காளி வெங்கட் முக்கிய படங்களில் நடித்திருந்தார்கள். 

சாம்பிகளை மையமாகக் கொண்ட கதையில் உருவான மிருதன் படத்தின் இரண்டாம் பாகமும் அதேபோன்ற இன்னொரு மாறுபட்ட கதைக்களத்தில் உருவாக இருப்பதாக கூறுகிறார்கள். இதேபோல், கடந்த 2015 ஆம் ஆண்டு மோகன் ராஜா இயக்கத்தில் ஜெயம்ரவி நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றிப் பெற்ற தனி ஒருவன் படத்தின் இரண்டாம் பாகத்தின் அப்டேட்-ம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

Read more

Local News