Tuesday, October 1, 2024

புதுச்சேரி அரசின் 2022-ம் ஆண்டுக்கான சிறந்த திரைப்படமாக `குரங்கு பெடல்’ தேர்வு !

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

புதுச்சேரி அரசின் செய்தி மற்றும் விளம்பரத்துறை, நவதர்ஷன் திரைப்படக் கழகம் மற்றும் அலையன்ஸ் பிரான்சேஸ் இணைந்து, ஆண்டுதோறும் இந்திய திரைப்பட விழாவை நடத்தி வருகின்றன. கடந்த ஆண்டில் வெளியான சிறந்த திரைப்படத்தை தேர்வு, அதன் இயக்குநர் மற்றும் படக்குழுவினருக்கு புதுச்சேரி அரசு சார்பில்  விருது வழங்கப்படும். அதன்படி புதுச்சேரி அரசின் 2022-ம் ஆண்டுக்கான சிறந்த திரைப்படமாக `குரங்கு பெடல்’ தேர்வு செய்யப்பட்டிருக்கிறது. அக்டோபர் 4-ம் தேதி புதுச்சேரி அலையன்ஸ் பிரான்சேஸ் கலையரங்கத்தில் துவங்கும் திரைப்பட விழாவில், குரங்கு பெடல் திரைப்படத்தின் இயக்குநர் கமலக்கண்ணனுக்கு விருது வழங்கி கௌரவிக்க இருக்கிறார் முதல்வர் ரங்கசாமி.

- Advertisement -

Read more

Local News