நடிகர் ஜெயம் ரவி சமீபத்தில் தனது மனைவி ஆர்த்தியுடன் பிரிவதை அறிவித்துள்ளார், மேலும் விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இது அவரது தனிப்பட்ட முடிவு என்று ஆர்த்தி கூறினார், அதில் தன்னை கலந்துகொள்ளவில்லை என்றும் தெரிவித்தார். இவர்களின் பிரிவுக்கு காரணம் ஒரு பாடகி தான் என விமர்சிக்கப்பட்டபோது ஜெயம் ரவி இதனை முற்றிலும் மறுத்தார்.
இந்நிலையில், ஆர்த்தி இன்ஸ்டாகிராமில் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில், “எனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்த பேச்சுக்கள் பரப்பப்பட்டபோது நான் அமைதியாக இருப்பது, என் பலவீனம் அல்லது குற்ற உணர்வினால் அல்ல. என்னைப் பற்றி தவறாக சித்தரிக்க முயல்பவர்களுக்கு பதிலளிக்காமல் நான் அமைதியாக இருக்கிறேன். ஆனால் நீதி நிலை நிறுத்தப்படும் என நம்புகிறேன்.
நான் ஏற்கனவே கூறிய அறிக்கையில் இருவரும் சேர்ந்து எடுத்த முடிவு என தவறாக புரிந்துகொள்ளப்பட்டது. இது அவரின் தனிப்பட்ட முடிவு தான், இது என்னை அதிர்ச்சியடையச் செய்தது. எனது திருமண பந்தத்தை நான் மதிக்கிறேன், இதை பொதுவெளியில் விவாதிக்க விரும்பவில்லை. எனது குடும்பத்தின் நலனை கருதுகிறேன், கடவுள் அருள் கிடைக்கும் என நம்புகிறேன்” என அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்