நடிகர் கார்த்தி வா வாத்தியார், மெய்யழகன் படங்களில் நடித்து முடித்துள்ளார். இப்படங்கள், அடுத்தடுத்து வெளியாக உள்ளன.இயக்குநர் மாரி செல்வராஜ், மாமன்னன் திரைப்படத்திற்குப் பின் நடிகர் துருவ் விக்ரமை வைத்து பைசன் படத்தை இயக்கி வருகிறார்.அதே போல் அவரின் வாழை திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.
இப்படத்திற்குப் பின் நடிகர் தனுஷை வைத்து படம் இயக்க உள்ளார். இதற்கிடையே, நடிகர் ரஜினிகாந்த் – மாரி செல்வராஜ் கூட்டணியில் படம் உருவாக உள்ளதாகக் கூறப்பட்டது.சமீபத்தில் ஆனந்த விகடனுக்கு அளித்த பேட்டியில் அவரது அடுத்தடுத்த படங்கள் பற்றி பகிர்ந்துள்ளார். அதில் என் ஒவ்வொரு படத்திற்கும் ரஜினிகாந்த் அவர்கள் என்னை அழைத்து வாழ்த்தி வருவதாகவும் அவருடன் இணைந்து பணியாற்றுவது குறித்து இனிமேல் தெரியவரும் எனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இயக்குநர் மாரி செல்வராஜ், தனுஷ் படத்தை இயக்கியதும் நடிகர் கார்த்தியை வைத்து படத்தை இயக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். இப்படத்திற்குப் பின்பே, ரஜினியுடன் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.