தமிழ் சினிமாவில் முதலில் ஒளிப்பதிவாளராக தன் வாழ்க்கையை தொடங்கியவர் இளவரசு. பாரதிராஜா இயக்கிய முதல் மரியாதை, கிழக்கு சீமையிலே போன்ற படங்களில் ஒளிப்பதிவாளராக செயல்பட்டவர் இளவரசு. பாஞ்சாலங்குறிச்சி படத்தில் மகாநதி சங்கருக்கு பின்னணி குரலில் பேசியிருப்பார் இளவரசு.

அதன் பின்னர் சீமான் இயக்கிய பாஞ்சாலங்குறிச்சி, இனியவளே, வீரநடை போன்ற திரைப்படங்களுக்கும் ஒளிப்பதிவு செய்துள்ளார். இவர் இதுவரை 13 படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றி இருக்கிறார்.ஒரு கட்டத்தில் நடிகராக மாறிய இளவரசு பல படங்களில் குணச்சித்திர நடிகராக நடித்திருக்கிறார். முத்துக்கு முத்தாக, மாயாண்டி குடும்பத்தார், அறை எண் 305ல் கடவுள், லிங்கா, ஜன்னல் ஓரம், தவமாய் தவமிருந்து, என்ஜிகே என பல படங்களில் நடித்திருக்கிறார் இளவரசு.


விமல் நடித்த களவானி திரைப்படத்தில் இவரின் கதாபாத்திரம் பெரும் வரவேற்பை பெற்றது. தமிழ் சினிமாவில் பன்முகத் தன்மை கொண்டவராக இருக்கும் இளவரசுவுக்கு பரதன் என்கிற மகன் இருக்கிறார். அவரின் திருமணம் அண்மையில் நடந்து முடிந்த நிலையில், மகனின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நேற்று சென்னை மணப்பாக்கத்தில் உள்ள ஜீவன் ஜோதி மஹாலில் நடைபெற்றது.இதில் திரையுலக பிரபலங்கள் பலர் படையெடுத்து வந்து மணமக்களை வாழ்த்தினர்.

குறிப்பாக கோலிவுட்டின் முன்னணி நடிகராக இருக்கும் கார்த்தி மற்றும் சிவகார்த்திகேயன் நேரில் வந்து பூங்கொத்து கொடுத்து வாழ்த்தினர்.அதே போல நடிகர் சமுத்திரக்கனி, நடிகரும் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளருமான சீமான் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். இந்த போட்டோக்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.