Tuesday, November 19, 2024

துப்பாக்கி படம் ரீ ரிலீஸ் பண்ணா நல்லா இருக்கும்… தனது ஆசையை வெளிப்படுத்திய காஜல் அகர்வால்…

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

திருமணத்துக்குப் பிறகு, காஜல் அகர்வால் மீண்டும் பிஸியான நடிகையாக மாறியுள்ளார். இந்தியன் 2 படத்தில் பல ஆண்டுகளுக்கு முன்பே நடிக்கத் தொடங்கிய காஜல், ஒரு கட்டத்தில் அந்த படம் வெளிவராது என நினைத்து சினிமாவிலிருந்து தற்காலிகமாக விலகும் முடிவை எடுத்தாராம்.

ஜூன் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட இந்தியன் 2 திரைப்படம் தற்போது ஜூலை 12-ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டு உள்ளது. இந்தப் படத்தின் ஒரு பீரியட் போர்ஷனில் சுகன்யாவுக்குப் பதிலாக காஜல் நடித்துள்ளதாகவும், இந்தப் படத்திற்காக கலரி பயிற்சி கற்றுக்கொண்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

நேற்று வெளியான பாரா பாடலில் வரும் பெண் குரலில் காஜலின் போர்ஷன் இடம்பெற்றுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.மே 17-ஆம் தேதி திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டிருந்த காஜல் நடித்த சத்யபாமா திரைப்படம், ஜூன் 7-ஆம் தேதி வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட காஜல், இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெறும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

தெலுங்கில் உருவாகியுள்ள இந்தப் படத்தின் புரமோஷனுக்காக அவர் யூடியூப் சேனல்களில் பேட்டி அளித்துவருகிறார்.அதில் கில்லி படம் ரீ-ரிலீஸாகி பெரிய வரவேற்பைப் பெற்றதையும் தொடர்ந்து, துப்பாக்கி படத்தையும் ரீ-ரிலீஸ் செய்யவேண்டும் என்றும், விஜய்யுடன் நடித்த படங்களில் துப்பாக்கி தான் மிகவும் பிடித்ததாகவும் காஜல் கூறியுள்ளார். விஜய்யுடன் காஜல் இணைந்து நடித்த துப்பாக்கி, ஜில்லா மற்றும் மெர்சல் போன்ற படங்கள் குறிப்பிடத்தக்கவை.

- Advertisement -

Read more

Local News