இன்று தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக உயர்ந்து இருப்பவர் சிவகார்த்திகேயன். இவருக்கு ஆர்த்தி என்ற மனைவியும், ஆராதானா என்ற மகளும், குகன் என்ற மகனும் உள்ள நிலையில் சமீபத்தில் மூன்றாவதாக ஒரு ஆண் குழந்தை பிறந்தது. தற்போது இந்த குழந்தைக்கு ‛பவன்’ என பெயரிட்டுள்ளார் சிவகார்த்திகேயன்.


தனது இல்லத்தில் குழந்தைக்கு நடந்த பெயர் சூட்டும் விழா தொடர்பான வீடியோவை பகிர்ந்து இந்த தகவலை தெரிவித்துள்ளார் சிவகார்த்திகேயன். மேலும் தனது மூன்று குழந்தைகள் பெயரான Aaradhana – Gugan – PAVAN என குறிப்பிட்டு ஹார்ட்டின் இமோஜியை பதிவிட்டுள்ளார்.
சிவகார்த்திகேயன் தற்போது ‘அமரன்’ என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். படப்பிடிப்பு முடிந்து ரிலீஸ்க்கு தயராகி வருகிறது. அடுத்து ஏ.ஆர். முருகதாஸ் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார்.